பெய்ஜிங்: சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. சீனாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாகிக் கிடக்கிறது! அந்த கடலில் பயணித்த 1000 கப்பல்கள் ஐஸ் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. தென் சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக