வியாழன், ஜனவரி 03, 2013

பிரதீபா பாட்டீல் ரிடையராகியும் விதிகளை மீறி அவரது குடும்பத்தாரை பாதுகாக்க 19 போலீசார் !

மும்பை: பிரதீபா பாட்டீல் ஜனாதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது குடும்பத்தாருக்கு 19 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதியானபோது அவரது கணவர் தேவிசிங் செகாவத், மகன் ராஜேந்தர், மகள் ஜோதி, மருமகள் மஞ்சிரி, மருமகன் ஜெயேஷ், பேரன்கள் பிரித்வி, த்ருவேஷ், பேத்திகள் சௌரபி மற்றும் வேதிகா ஆகியோருக்கு பாதுகாப்பு அளி்க்குமாறு மத்திய
அரசு மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பிரதீபா பாட்டீலின் கணவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மகன் மற்றும் மகளுக்கு ஒய் பிரிவு, மீதமுள்ள 6 பேருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு எஸ்.ஐ. மற்றும் 18 கான்ஸ்டபிள்கள் பிரதீபா பாட்டீலின் குடும்பப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதீபா ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வாபஸ் பெறவில்லை. பிரதீபா பாட்டீலின் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிர அரசு உள்துறை அமைச்சகத்தை மூன்று முறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை. மாநிலத்தில் உள்ள போலீசாரில் பலர் அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கை காக்க போலீசார் போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக