தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக பாகிஸ்தானுக்கு ராணுவ முகாம்களின் போட்டோக்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் போட்டோக்கள், மற்றும் ரகசிய தகவல்கள் அடங்கிய சி.டியை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு அளிக்க முயன்றதாக கூறி திருச்சியில் கைது செய்யப்பட்டார் அன்சாரி.
இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்ற கிளை அன்சாரி மீது போடப்பட்டிருந்த தே.பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கான உத்தரவு இன்று திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து தமீம் அன்சாரி இன்று மதியம் திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக