ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் : கடந்த செவ்வாய்க்கிழமை (08/01/2013) ஸில்வான் நகரில் உள்ள ஸுவைஹ் குடியிருப்பில் உள்ள பலஸ்தீனரின் வீட்டை ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அதிகாரசபை இடித்துத் தகர்த்துள்ளது.
ஸில்வான் பிரதேசப் பாதுகாப்புக் குழுமத்தின் அங்கத்தவர் பஹ்ரி அபூ தியாப் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அதிகார சபையின் இந்நடவடிக்கையை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர் இது குறித்துக் கருத்துரைக்கையில், "ஆக்கிரமிப்பு நிர்வாகம் இடித்துத் தகர்த்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் பலஸ்தீனருக்குச் சொந்தமானது. கட்டிட நிர்மாணப் பணி முடிவுறும் தறுவாயில் இருந்த அக்கட்டிடத்தில் யாரும் குடியிருக்கவில்லை. புயலும் மழையுமாய் உள்ள தற்போதைய காலநிலையையும் கருத்திற்கொள்ளாமல், ஆக்கிரமிப்பு அதிகார சபை மேற்படி கட்டிடத்தை இடித்துத் தகர்த்துள்ளது. இதன் மூலம் அது தன்னுடைய அவலட்சணமான முகத்தை மீண்டும் ஒருதடவை தெளிவாகக் காட்டித்தந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அதிகார சபை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப் பிரதேசத்தில் வாழும் பலஸ்தீனர்களைத் திட்டமிட்ட முறையில் துடைத்தெறியும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரினை முழுக்க முழுக்க யூதமயப்படுத்தி, மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களையும், அறபுக் கிறிஸ்தவர்களையும் நகரைவிட்டு வெளியேற்றும் செயற் திட்டத்தைத் தொடர்ந்து அமுல்நடத்தி வருகின்றது என்றும் தொடர்ந்தும் பல்வேறு விமர்சனகளையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக