டெல்லி மாணவி பாலியல் வழக்கி மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், அதனை விடியோவில் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி பலியான வழக்கு டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன், சாகேத் விரைவு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது டெல்லி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,டெல்லி மாணவி பாலியல் வழக்கி மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், விசாரணையை விடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கு விசாரணையை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தியாக வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக