ராஞ்சி: தமிழகத்திற்கு மின்சாரம் பெறுவதற்காக சட்டீஸ்கர் மாநிலத்தில் அனல் மின் நிலையம் கட்டும் முயற்சிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ராய்ப்பூர் வந்து அந்த மாநில முதல்வர் ரமன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் பேசுகையில், சட்டீஸ்கரில் அனல் மின்நிலையம் அமைக்க தமிழகம் ஆர்வமாக உள்ளது என்ற தகவலை முதல்வர் ரமன் சிங்கிடம் தெரிவித்துள்ளேன். சட்டீஸ்கர் அரசின் கொள்கைப்படி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 30 சதவீதத்தை சட்டீஸ்கரே வாங்கிக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். 7.5 சதவீத மின்சாரம் மட்டும் மாறுபட்ட கட்டணங்களில் விற்கப்படும். தமிழக மின் தேவைக்காக சட்டீஸ்கரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ரமன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக