டமாஸ்கஸ்: 21மாதங்களாக தொடரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிரியா பிரதமர் வஇல் நாதிர் அல் ஹலவி அறிவித்துள்ளார். நெருக்கடிக்கு தீர்வுகாண திட்டம் தயாராக்கியிருப்பதாக ஐ.நா-அரபுலீக் பிரதிநிதி அஹ்தர் இப்ராஹீமி அறிவித்த உடனேயே சிரியா பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய நல்லிணக்க பேச்சுவார்த்தையில் ஒத்துழைக்க சிரியா அரசு தீர்மானித்துள்ளது என்றும், அமைதியாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் அல் ஹலவி தெரிவித்தார். வெளிநாடுகள்
சிரியா விவகாரத்தில் தலையிடாமலிருக்கவே பேச்சுவார்த்தைக்கு தயாராகிறோம். சர்வதேச அழுத்தமோ, உபதேசமோ இல்லாமல் ஆஸாத் அரசுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வரும். நாட்டின் இறையாண்மையும், சர்வதேச சட்டங்களும் பாதுகாக்கப்படும் வகையில் உலக ஒழுங்கை வார்த்தெடுக்க வேண்டும் என்பது சிரியாவின் லட்சியமாகும். சிரியாவின் எதிரிகளுக்கு எதிராக வெற்றியை அறிவிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது என்று ஹலவி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக