புதன், ஜனவரி 09, 2013

50 சுறா மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய பரிதாபம் !

பீஜி நாட்டில் உள்ள தீவின் கடற்கரையில் 50 சுறா மீன்கள் திடீரென இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜி நாடு பல தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள நுலோவு தீவின் கடற்கரையில் ஹேம்மர்கெட் என்ற வகையை சேர்ந்த 50 சுறா மீன்கள் திடீரென கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலானவை சுறாமீன் குட்டிகள். இருப்பினும் மற்ற இன மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடல் நீரில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக