புதுடெல்லி:இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் 2013-ஆம் ஆண்டை பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அர்ப்பணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லி பாராமெடிக்கல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு போராடி மரணமடைந்ததையொட்டி குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் கூறியிருப்பது: “பிணத்தின் மீது போர்த்தப்பட்ட
போர்வையின் இருளினூடே நமது புத்தாண்டு வருகிறது. கொடும் குற்றத்தால் இறந்த அப்பெண்ணுக்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது. 2013ஆம் ஆண்டை மகளிரின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்போம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்து, உளமார, பெண்களுக்கு உரிய கண்ணியமும்,சமத்துவமும் கிடைப்பதை உறுதி செய்வோம். நம் கனவுகள் நனவாகக் கடுமையாக உழைப்போம்” என பிரணாப் தனது புத்தாண்டுச் செய்தியில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக