புதுடெல்லி:இணையதள பயனீட்டாளர்களை போலி இணையதளங்களுக்கு திசை திருப்பும் வைரஸ் இணையதளங்களை முடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டி.என்.எஸ் சேஞ்சர்(DNSCHANGER) வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் கம்ப்யூட்டர்களில் திங்கள் கிழமை முதல் இண்டர்நெட் கிடைக்காது என்ற பீதி நிலவுகிறது.இந்த மோசமான வைரஸ் ப்ரோக்ராம், கம்ப்யூட்டர்களை போலி இணையதளங்களுக்கு திசை திருப்பி
உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை பாதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் இவற்றின் இண்டர்நெட் ஆக்ஸஸ் முடங்கும் என இணையதள பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி.என்.எஸ்.(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது, நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ். சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸை உருவாக்கி இதன் மூலம் கணினியை செயல் இழக்கச் செய்யும் நாச வேலையில் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் இறங்கினர்.
இது கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. மாற்று சர்வரை நிறுவி உதவியது.
இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9-ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்சம் கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 69,500 கம்ப்யூட்டர்களை வைரஸ் பாதித்துள்ளது. டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ் பாதித்த நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி 1 மற்றும் 2-வது இடங்களில் உள்ளன.
டி.என்.எஸ். சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
எனவே கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us அல்லது http://dnschanger.detect.my/ கிளிக் செய்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக் கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக