திங்கள், ஜூலை 09, 2012

கர்நாடகா:நான்கு ஆண்டுகள்; மூன்று முதல்வர்கள் !

கர்நாடகா-நான்கு ஆண்டுகள்- மூன்று முதல்வர்கள்!பெங்களூர்:எதிர் தரப்பினரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து சதானந்தா கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளில் கர்நாடாகாவில் மூன்று முதல்வர்களை பதவியில் வைத்து அழகு பார்க்கும் சாதனையை பா.ஜ.க படைத்துள்ளது. 2008-ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பா.ஜ.க முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். மூன்று ஆண்டுகள்
ஆட்சியில் நிலவிடுவிப்பு முறைகேடு வழக்கிலும், சுரங்கத்தொழில் ஊழலிலும் சிக்கி கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி எடியூரப்பா தனது பதவியை ராஜினாமாச் செய்தார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி டி.வி.சதானந்த கவுடா 2-வது முதல்வராக பொறுப்பேற்றார். எடியூரப்பாவின் ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட கவுடா, தனது சொந்த முடிவுகளில் உறுதியாக இருந்ததை தொடர்ந்து எடியூரப்பாவின் கோபத்திற்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து சதானந்தா கவுடாவுக்கு நெருக்கடி முற்றி, ஒன்பதை அமைச்சர்கள் தங்களது ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர். இதனால் திக்குமுக்காடிய பா.ஜ.க மேலிடம் சதானந்தா கவுடாவை ராஜினாமச்செய்ய உத்தரவிட்டது.
புதன்கிழமை எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரான ஜகதீஷ் ஷெட்டார் கர்நாடகாவின் 3-வது பா.ஜ.க முதல்வராக பதவியேற்க உள்ளார்.
1989-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் இவ்வளவு முதல்வர் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதலில் விரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தார். ஆனால், காலாவதி முடியும் முன்னரே எஸ்.பங்காரப்பாவுக்காக, பாட்டீல் முதல்வர் பதவியை இழக்கவேண்டிய சூழல் உருவானது. அடுத்து எதிர்தரப்பினரின் நெருக்கடியைத் தொடர்ந்து பங்காராப்பாவை நீக்கி விட்டு வீரப்பமொய்லியை காங்கிரஸ் மேலிடம் கர்நாடகா முதல்வராக நியமித்தது. 1994-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, ஜனதா தளம் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக