
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தவறான பழக்கத்தை மாற்றுவதற்காக இதைச் செய்ததாக விடுதி காப்பாளர் கூறியுள்ளார். சிறுநீர் கழிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பைப் பிழிந்து சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி அவர் ஊற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியின் தாய், மகளின் நலன் விசாரிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், சம்பந்தப்பட்ட விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக