நாம்பென்:விபத்து சூழலை உணர்ந்து பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள விமானநிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்திற்கு அனைத்து வித உதவிகளையும் வழங்கிய பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.பயணிகளுடன் பாகிஸ்தான் அதிகாரிகள் நடந்துகொண்ட முறை, உணவு உள்பட அவர்கள் அளித்த
உதவிகள் பாராட்டத்தக்கது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
ஆஸியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள கம்போடியா தலைநகர் நாம்பென்னிற்கு வருகைத் தந்த எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அபுதாபியில் இருந்து டெல்லிக்கு 120 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், விபத்து சைரன் முழங்கியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள விமானநிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக