புதுடெல்லி:தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்கள் அதிகமாக கடத்தப்படுகின்றனர் என்று National Crime Record Bureau (தேசிய குற்றவியல் ஆவணப் பதிவகம்) கூறுகிறது. தமிழகத்தில்தான் பெண்கள் கடந்த 2011ம் ஆண்டு அதிக அளவில் கடத்தப்பட்டுள்ளனர். நான்கு தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண்கள் கடத்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள்
தேசிய அளவில் பெண்கள் கடத்தலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அங்கு மொத்தம் 7525 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும், 3வது இடத்தில் பீகாரும் உள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 187 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சேலத்தில் 108, கடலூரில் 100 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் சென்னையில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவையில் இது 39ஆக இருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால்மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துள்ளன.
குடும்பப் பிரச்சினை, கல்யாணம் செய்து தர மறுப்பது,பணம் கேட்டு மிரட்டல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. கள்ளக்காதல் தொடர்பான கடத்தல்களும் கணிசமாக உள்ளதாக என்.சி.ஆர்.பி தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக