வியாழன், ஜனவரி 19, 2012

தற்போதைக்கு பாகிஸ்தான் திரும்பும் எண்ணம் இல்லை: முஷாரப் !

தற்போதைக்கு பாகிஸ்தான் திரும்பும் எண்ணம் இல்லை: முஷாரப்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், பர்வேஸ் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டுள்ளார்.  தற்போது லண்டனில் வசித்து வரும் முஷாரப், நாடு திரும்புவதாக அறிவித்தார்.  அவர் பாகிஸ்தானுக்குள் வந்தவுடன் கைது செய்யப்படுவார் என பாக். பாராளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
 
இந்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் திரும்பப் போவதாக முஷாரப் அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த தேதியில் பாகிஸ்தான் திரும்பப் போவதில்லை என்று தன் முடிவை அதிரடியாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதை அடுத்து பாகிஸ்தானில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக