சிப்ஸாகர்:குவஹாத்தியில் இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து பகிரங்கமாக மானபங்கப்படுத்த முயன்ற சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய சர்ச்சையும், அதிர்ச்சியும் தணியாத நிலையில் மீண்டும் அதே அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமி ஒருவரை மானபங்கபடுத்த முயற்சி நடந்துள்ளது.இம்முறை வேலியே பயிரை மேய்வதைப் போல நாட்டையும், நாட்டு மக்களையும்
பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கும் ராணுவத்தினர் இந்த வன்செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் சிப்ஸாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் விறகு பொறுக்க சென்றுள்ளார் ஒரு சிறுமி. பருவமடையாத அச்சிறுமியை ராணுவத்தினர் மானபங்கபடுத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டொலாபா காட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த லான்ஸ் நாயக்கின் தலைமையிலான ராணுவத்தினர் சிறுமியை மானபங்கப்படுத்த முயன்றுள்ளனர். சிறுமி சத்தம் போட்டதைத் தொடர்ந்து ஓடிவந்த கிராமவாசிகள் அவரை காம வெறிப்பிடித்த ராணுவத்திடமிருந்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டனர். இத்தகவலை சிப்ஸாகர் போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
ஆனால், இச்சம்பவம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று ராணுவ அதிகாரிகள் மழுப்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக