கெளஹாத்தி: அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் 20க்கும் மேற்பட்ட குடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்லும் சாலையில் மதுபானக் கடைக்கு இளம்பெண் ஒருவர் நண்பருடன் வந்திருக்கிறார். அப்போது போதையில் இருந்த 20 பேர்
கொண்ட கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்து மானபங்கப்படுத்தியுள்ளனர். அவரது தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை உடைகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே களைந்தும் இருக்கின்றனர்.சுமார் அரைமணி நேராமக அந்தக் கும்பலின் அட்டகாசம் நீடித்தது. அப்பகுதிக்கு போலீசார் வந்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பாக்கிவிட்டது. அப்புறம் என்ன! மாநிலமே களேபரமானது.
அசாம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இச் சம்பவத்துக்கு முதல்வர் தருண் கோகய் இதனால் வேறு வழியில்லாமல் 3 பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது. மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலும் இந்த சம்பவம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக