ஞாயிறு, நவம்பர் 13, 2011

வழக்கை ரத்துச்செய்ய சஞ்சீவ் பட் மனு: குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி:குஜராத் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்ததாக தொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்துச் செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அளித்த மனுத்தொடர்பாக உச்சநீதிமன்றம் குஜராத் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்த சஞ்சீவ் பட் மாநில அரசு தன்னை கொடுமைக்கு ஆளாக்குவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் குஜராத் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை சுதந்திரமாக விசாரிக்க சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என பட் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் துஷார் மேத்தா வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து குஜராத் போலீஸ் இவ்வழக்கை சைபர் பிரிவிடம் ஒப்படைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக