வியாழன், நவம்பர் 10, 2011

ராணுவம் இல்லாத பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தேவையா? – உமர் அப்துல்லாஹ் கேள்வி ?

AFSPA_Kashmirஜம்மு:பலவருடங்களாக ராணுவம் நிறுத்தப்படாத பிரதேசங்களில் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை எதற்கு என கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை குறித்து தீர்மானிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என அவர் கூறினார்.
ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதே தங்களின் நோக்கம் என அவர் கூறினார்.
பாராமுல்லா, ஸோப்பார், குப்வாரா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற கூறவில்லை என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். இச்சட்டத்தை வாபஸ் பெறுவதுக் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன பிரச்சனை உள்ளது?பணி முடிந்துவிட்டது எனக்கூறி ராணுவம் ஸ்ரீநகரிலும், புத்காமிலும் செயல்பட்டது. ஜம்முகஷ்மீரில் ஊடுருவலை தடுப்பதற்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பது ராணுவத்தின் கோரிக்கையாகும். ராணுவம் செயல்படாத பகுதிகளில் சட்டப் பாதுகாப்பிற்கு என்ன தேவை? என்பது நேரடியான கேள்வியாகும். இதற்கான பதிலை ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கடைசி துப்பாக்கிச் சத்தத்தையும் நிறுத்தும் வரை காத்திருக்க வேண்டுமானால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற ஒருபோதும் இயலாது. அரசுக்கு தைரியம் உள்ளது. துவக்கத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவது சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இறுதி பலன் நன்றாக இருக்கும். இவ்வாறு உமர் அப்துல்லாஹ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக