வெள்ளி, நவம்பர் 18, 2011

பாகிஸ்தானில் சர்தாரி ஆட்சியை கவிழ்த்து ராணுவ புரட்சி ஏற்படும்; அமெரிக்க உயர் அதிகாரி தகவல்


பாகிஸ்தானில் சர்தாரி ஆட்சியை கவிழ்த்து ராணுவ புரட்சி ஏற்படும்;
அமெரிக்க உயர் அதிகாரி தகவல்பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி ஏற்படும் என அமெரிக்க உயர் அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற தளபதி கயானி முயற்சி செய்கிறார். அப்படி அவர் புரட்சி நடத்தினால் அதை முறியடிக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரி சர்தாரி அமெரிக்காவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
 
 இந்த கடிதத்தை அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி மைக்முல்லனிடம் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி கொடுத்தார். மேலும் இக்கடிதம் அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழில் அதிபர் மன்சூர் இஜாஜ் என்பவர் மூலம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது. அதை தொடர்ந்து இஜாஷ் பாகிஸ்தான் திரும்பி வந்து விளக்கம் அளிக்கும்படி தூதர் ஹக்கானியை அந்நாட்டு அரசு கேட்டு கொண்டது. எனவே ஹக்கானி பதவி விலக முன் வந்துள்ளார்.
 
தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அந்த நிலையில் பாகிஸ்தானில் சர்தாரி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற கயானி திட்டமிட்டு இருப்பது உண்மைதான் என மைக்முல்லனின் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜான்கிர்டி தெரிவித்துள்ளார்.
 
அதை முல்லன் உறுதி செய்துள்ளார். அந்த கடிதத்தை சர்தாரி எனக்கு அனுப்பியது உண்மைதான். ஆனால் இதுகுறித்து நான் கண்டு கொள்ளவில்லை. எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். மைக்முல்லன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக