கடும் எதிர்ப்பை தொடர்ந்து போப் ஆண்டவர்-இமாம் இருவரும் முத்தமிடும் விளம்பரம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த `பெனட்டான்' என்ற நிறுவனம் உலக மக்களை கவருவதற்காக வித்தியாசமாக 6 விளம்பரங்களை தயாரித்தது. `வெறுப்பு இல்லை' என்ற தலைப்பில் பிரபலமான 6 உலக தலைவர்களின் போட்டோக்களில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடுவது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமா-சீன அதிபர் ஹூஜிண்டோ, போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்- எகிப்து இமாம் அகமது எல் தயேப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடயாகு- பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் ஆகியோர் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது போன்று விளம்பரம் வெளியிட்டது. குறிப்பாக போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டும், எகிப்து இமாம் அமகது எல் தயேப்பும் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது போன்று விளம்பரம் வெளியாகி இருந்தது.
இதற்கு கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து வாடிகன் செயலாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், பெனட்டான் நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து இந்த அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் இந்த விளம்பரம் வாபஸ் பெறப்பட்டது.
போப் தலைவருடன், இமாமும் முத்தமிட்டுக் கொள்ளும் போட்டோ பெனட்டான் நிறுவன `வெப்சைட்'டில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக