காங்கோ நாட்டில் வெடித்து சிதறும் எரிமலையை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். இந்த எரிமலை சுமார் 980 அடி உயரத்துக்கு தீப்பிழம்பு போன்று குழம்புகளை சீறியப்பாய்ந்து வெளியேற்றி வருகிறது. இதை பார்க்க சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் நியா முலாஜிரா என்ற இடத்தில் எரிமலை உள்ளது. அந்த எரிமலை கடந்த 6-ந்தேதி வெடித்தது. அதில் இருந்து கரும்புகையுடன் எரிமலை குழம்பு வெளியேறி ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதை நேரில் பார்க்க மிகவும் ஆசைப்பட்டனர். தொடக்கத்தில் அதற்கு அனுமதி மறுத்த காங்கோ நாட்டு நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
அதற்காக அதன் அருகேயுள்ள விருங்கா பூங்காவில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்க நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகை கட்டணம் வசூக்கலிப்படுகிறது. இரவில் சுற்றுலா பயணிகள் சுமார் 1 கி.மீட்டர் தூரம் பயணத்துக்கு பின் நியாமுலாஜிரா எரிமலை அருகே அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு சுமார் 1000 அடி தூரத்துக்கு அப்பால் அவர்களை நிற்க வைத்து எரிமலை வெடித்து சிதறுவதை பார்க்க வைக்கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்லாத வகையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று எரிமலை வெடித்து சிதறும் அழகை கண்டு ரசிக்கின்றனர். இதற்கு முன்பு வெடித்து சிதறிய ஹாவாய் கிளாவுயா எரிமலையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அந்த எரிமலை 65 அடி உயரத்துக்கு நெருப்பு குழம்பை கக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக