சீனாவில் தலைநகர் பெய்ஜிங்குக்கும், வர்த்தநகரம் ஷாங்காய்குக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில்கள் சமீபத்தில் விபத்துக்குள்ளாகின.
கடந்த ஜூலை மாதம் வென்ஷூ நகரில் நடந்த புல்லட் ரெயில் விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த ரெயிலுக்கு சீனாவில் எதிர்ப்பு கிளம்பியது.
அதைத் தொடர்ந்து பெய்ஜிங் - ஷாங்காய் இடையே இயக்கப்பட்ட 54 புல்லட் ரெயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. தற்போது புல்லட் ரெயில்களில் சிறிது மாற்றம் செய்து அவற்றின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, புல்லட் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக