செவ்வாய், நவம்பர் 01, 2011

ராமர் பிறந்த இடம்:சங்க்பரிவாரத்தின் வாதத்தை கேள்வி எழுப்பும் மராட்டிய பிராமணர் எழுதிய நூல்!!!

புதுடெல்லி:ராமனின் பிறந்த இடம் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் என சங்க்பரிவார அமைப்புகளின் கூற்றை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் மராட்டிய சித்பவன பிராமணன் எழுதிய 100 வருடங்கள் பழமையான புத்தகம் அமைந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன்பு மராட்டிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம் அண்மையில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

விஷ்ணு பட் கோட்ஸே வீர்ஸெய்கார் எழுதிய ’1857 த ரியல் ஸ்டோரி ஆஃப் க்ரேட் அப்ரைஸிங்’ என்ற பயணக்குறிப்புகள் அடங்கிய புத்தகம்தான் ஹிந்துத்துவா அமைப்புகள் எழுப்பும் வாதங்களையும், பாப்ரி மஸ்ஜிதின் மையப்பகுதி அமைந்திருந்த இடத்துக்கு கீழே உள்ள பகுதி ராமர் பிறந்த இடம் என்ற அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் இந்த புத்தகம் மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த புத்தகம் ஒரு காலத்தில் மராட்டிய மொழியில் வெளிவந்த பிறகு இதன் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு ஒரு ராம நவமி தினத்தில் இந்த புத்தகத்தின் ஆசிரியரான விஷ்ணு பட் அயோத்தியை வந்தடைகிறார். தொடர்ந்து ராம ஜென்ம பூமியில் பூஜை நடத்துவது குறித்த விபரங்கள் புத்தகத்தில் அடங்கியுள்ளன. ஸரயூ நதியில் குளித்த பிறகு துளசி இலைகளுடன் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் புறப்பட்டனர் என புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பு கூறுகிறது.
பாக்கும், நாணயங்களும் காணிக்கையாக வைக்க அவர்களிடம் இருந்தன.இங்கே துளசி இலையை வைத்து நடத்தும் பூஜை பலனளிக்கும் என (அவர்கள்) கருதுகின்றனர். அவர்களுடன் நானும் காணிக்கையுடன் ராமன் பிறந்த இடத்திற்கு சென்றேன். ஐதீக ஸ்தலம் திறந்த வெளியில் இடுப்பு வரை உயரத்தில் ஒரு நடைபாதையாக இருந்தது(platform) சுண்ணாம்புக்கற்களால் அவை நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் அதற்கு சுற்றுமதில் கட்டப்பட்டிருந்தது. புற்களும், காட்டுச்செடிகளும் அதனை சுற்றிலும் படர்ந்திருந்தன. தொலைவிலிருந்து பார்த்தால் சுற்றுச்சுவர் கோட்டையின் சிதிலமடைந்த பகுதியாக தோன்றும்.ராமனின் தாயார் கவுசல்யாவின் நிலம் ஒரு சமதளமான இடமாக இருந்தது-இவ்வாறு விஷ்ணு பட் எழுதுகிறார்.
1527-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை குறித்த விமர்சனங்கள் விஷ்ணுபட்டின் பயணக்குறிப்புகள் அடங்கிய புத்தகத்தில் எங்கேயும் காணமுடியவில்லை. ராம ஜென்மபூமியின் சுற்றுவட்டாரத்தில் பாப்ரி மஸ்ஜித் இருந்தது என்ற தகவல் கூட அக்குறிப்புகளில் இல்லை. பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ராமர் ஜென்ம பூமியாக வழிபட்டிருந்த இடம் இல்லை என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.
1857-ஆம் ஆண்டு ’சியா பந்தாசி ஹகீகத்(cya bandaci hakikat) என்ற பெயரில் எழுதிய புத்தகம் விஷ்ணு பட்டின் மரணத்திற்கு பிறகு 1907-ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதன் பல பாகங்களிலும் பிரிட்டீஷாருக்கு எதிரான விமர்சனங்கள் இடம்பெற்றிருந்ததால் அவர்களுக்கு அஞ்சி எழுத்தாளர் உயிருடன் இருக்கும் வேளையில் இந்நூல் வெளியிடப்படவில்லை என கருதப்படுகிறது. பின்னர் இந்நூல் ஹிந்தி மொழியில் இரண்டு தடவை மொழிப்பெயர்க்கப்பட்டது.மிருணாளினி பாண்டே என்பவர்தாம் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக