இந்தியா சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள்முடிந்து விட்டது. இருந்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வு மட்டும் இன்னும் உயரவில்லை. நமது பொருளாதார சூரப்புலிகள் இந்தியாவை ஹைடெக் சிட்டியாக மாற்ற போவதாக கொக்கரிகின்றனர். கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் குடிசைகள், குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள்சாலை ஓரங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் மலம், ஜாலம் கழிக்கின்றனர். மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை.
மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சேரிகளில் வாழும் மக்கள் இப்படியாக மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். ஓவ்வொரு ஊர்களிலும், நகரகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையிலும், குடிசைகளிலும் வாழ்கின்றனர். போதிய மருத்துவ வசதிகள் இல்லை.
இதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் கூடங்குளத்திற்கு பசுமை வீடுகளாம்! சத்திஷ்கர் மலையில் வாழும் மக்களுக்கு உயர்தர வீடுகளாம்! அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கூடங்களாம்!ஏன் இந்த தீடீர் அக்கறை? கூடங்குளத்தில் அணு மின்நிலையத்தை எப்படியேனும் திறக்க வேண்டும். அது போல் சத்தீஸ்கர் மலைகளில் உள்ள கனிம வளங்களை தோண்டி எடுத்து வெளிநாட்டு வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்க வேண்டும்.
இப்போது விளங்குகிறதா எவ்வளவு கேவலமானவர்கள் நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசு இயந்திரங்கள் என்று. பெரும்பான்மையான மக்கள் குடிசைகளில் வசிக்க, இன்னும் பலர் ரோட்டோரம் வசிக்க இவர்கள் என்னவோ கூடங்குளத்தை பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று தங்க நகரமாக மாற்ற போகிறார்களாம்.
உலக வங்கியில் அதிகம் கடன் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது. எடுப்பதோ என்னவோ பிச்சை அந்த பிச்சையை சரிசமமாக எல்லா குடிமக்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கூட இவர்கள் எல்லாம் குடிசைகளில் வாழும் நிலை வந்திருக்காது. சிந்திப்பார்களா.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக