
எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.
அனைத்து இனங்களையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் அப்போது வலியுறுத்தியதாக நிஜாம் காரியப்பர் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட விஷயங்களை அரசு தரப்பினருடன் நடைபெறும் சந்திப்பில் வலியுறுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார் எனறார் நிஜாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக