கிரிக்கெட்டின் அடுத்த பரிமாணமாக, ஆட்டக்காரர்களை குழுமங்கள் ஏலம் எடுத்து போட்டி நடத்தும் முறையாக ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது போல பீ.பி.எல். போட்டியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிப்ரவரி 10 முதல் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தின் இப்போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக விலை போனவர்கள் விபரம்:
பாகிஸ்தானின் அப்ரிடி 7 லட்சம் டாலருக்கு
ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 5.5 லட்சம் டாலருக்கும்,
சக நாட்டவர்களான மார்லன் சாமுவேல்ஸ் 3.6 லட்சம் டாலர்களுக்கும்,
பொல்லார்டு 3 லட்சம் டாலர்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் வீரர்களைத் தவிர இலங்கையின் முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ்,பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் பிராவோ, நியூஸிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ், ஜிம்பாப்வேயின் பிரென்டன் டெய்லர் உள்ளிட்டோரும் நல்ல விலை போயினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக