வியாழன், ஜனவரி 05, 2012

தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது: பிரவீன்குமார்


தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது: பிரவீன்குமார்தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று வெளியிடப்பட்டது. இப்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 53 லட்சத்து 35 ஆயிரம். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரம். இதர வாக்காளர்கள் 2 ஆயிரத்து 175. இதில் 21 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவார்கள். 2012-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரம் ஆகும். 18 வயது முதல் 19 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் ஒன்றினை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் கடந்த 5-ந் தேதி தொடங்கி, வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்த கால கட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக