தொலைத் தொடர்பு சாதன ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைதொடர்பு துறையின் முன்னாள் துணை இயக்குனர் ஜெனரல் ருனு கோஷ், ஹைதராபாத்தை சேர்ந்த பி. ராமாராவ் ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடய வேண்டுமென்று இன்று காலை உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ருனு கோஷ் மற்றும் பி. ராமாராவ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடந்தனர். அவர்களை டெல்லி நீதிமன்றம் ஜெயிலுக்கு அனுப்பியது. ஆனால், முன்னாள் அமைச்சர் சுக்ராம் தனது உடல்நிலையை காரணம் காட்டி சரணடையவில்லை. இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக