ஜுனகத்:காவல்துறை அதிகாரிகள் 2002 குஜராத் கலவரத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்த ஆய்வில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் தங்களின் அரசியல் தலைவர்களின் கட்டளைகளுக்கு இணங்கி தலித் மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகளும் முழுமூச்சுடன் பங்கு கொண்டனர் என்பது தெளிவாகியுள்ளது.
எனினும் உயர் வகுப்பை சேர்ந்த சில அதிகாரிகள் மோடி அரசால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஆபத்து என்று தெரிந்தும் 1995 முதல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டதையும் முஸ்லிம்களை போலி என்கவுன்டர் குறித்து தகவல் வெளியிட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது பகைமை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், முஸ்லிம்களை போலி என்கவுன்டர் செய்தவர்களில் முக்கியமானவர்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் மற்றும் குஜராத் காவல்துறையை சேர்ந்த அமின். சொஹ்ராபுதின் ஷேக் போலி என்கவுன்டரில் பங்கு கொண்டவர்கள் இந்த வன்சாராவும், அமினும். ஆனால் மீடியாவிடம் மோடியையும், VHP தலைவர் பிரவின் தொக்காடியவையும் கொள்ள வந்த லஷ்கர்-இ-தொய்பா என்பதால் தான் என்கவுன்டர் செய்ததாக பொய் கூறினார்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வன்சாரா மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதும் அவர் கல்வி கற்க முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்பதும் தான். மேலும் ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் மற்றும் அமின் அனைவரும் தலித் வகுப்பைக் சார்ந்தவர்கள் என்பதும் தான்.அதுபோல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் நோபெல் பர்மரும் தலித் வகுப்பிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர். இவர் தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரணை செய்தவர்.
இவர் தன பங்கிற்கு மௌலானா உமர்ஹாஜி உட்பட அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது வேண்டுமென்றே வழக்கை ஜோடித்து சிறைக்கொட்டடிக்கு அனுப்பியவர். அதற்கு சன்மானமாக இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக முஸ்லிம்கள் மீது வழக்கு போட மறுத்த அதிகாரிகள் ஒதுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளில் முதன்மையானவர் R.B.ஸ்ரீகுமார், இவர் கேரளத்தைக் சேர்ந்த பிராமணர்.
இவர் நானாவதி கமிஷனுக்கு முன் நீக்கப்பட்டது மோடி அரசிர்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதுடன் அவருடைய வாக்குமூலம் ஆதாரமாகவும் சேர்க்கப்பட்டு அது பின்பு விசாரணைக்கு பெரிதும் உதவியது நினைவிருக்கலாம். ஸ்ரீகுமாருக்கு பதவி உயர்வு வழங்கபடாததை தொடர்ந்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் அவருக்கு காவல்துறை தலைமை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவரை தொடர்ந்து ராகுல் ஷர்மாவும் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டவர். இவரும் பிராமணர் கலவரத்தில் மதரசாவை தாக்கி கொண்டிருந்த கும்பல் மீது நடவடிக்கை எடுத்ததுடன் பி.ஜே.பியை சேர்ந்த 21 பேரை கைதும் செய்தவர். இதனால் இவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு முன் ராகுல் ஷர்மா குற்றப்பிரிவில் இருந்தவர் குல்பர்கா கூட்டுப்படுகொலை, நரோடா பாட்டியா போன்ற வழக்குகளை விசாரணை செய்து கொண்டிருந்தார்.
மேலும் ஷர்மா முதலமைச்சர் அலுவலகம் முதலான கலவரத்திற்கு தொடர்புடைய அனைத்து தொலை பேசி உரையாடல்களையும் குருந்தகிடில் பதிவு செய்து வைத்திருந்தார். அதே போன்று பாதிக்கப்பட்ட இன்னொருவர் குல்திப் ஷர்மா. இவர் தன் கீழுள்ள அதிகாரி கீதா சாரியை சொஹ்ராபுதின் ஷேக் போலி என்கவுன்டர் தொடர்பான குற்ற பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்ய வைத்ததற்காக இவர் குஜராத்தின் கால்நடை வாரியத்திற்கு மாற்றப்பட்டார்.
அடுத்து ரஜ்னிஷ் ராய் இவர் தான் துணிந்து வன்சாரா, பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோரை சொஹ்ராபுதின் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்தவர். மேலும் இவர் குஜராத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சஞ்சீவ் பட் தன்னுடைய பிரமான பத்திரத்தின் மூலம் மோடியின் முகத்திரையை கிழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வதோதராவின் சமூக சேவகரும் அரசியல் ஆர்வலருமானா ஜுபைர் கூறுவதாவது அஹ்மதாபாதிலும், வதோதராவிலும் முஸ்லிம் ஊர்களை சுற்றி வசிக்கும் தலித் மக்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாடுவதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
RSS மற்றும் VHP-யின் சதியால் காவி பயங்கரவாததிற்கு துணை போகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர் பாண்டுக்வாலா தெரிவித்தார். மேலும் தலித் மக்களுடன் முஸ்லிம்கள் தங்களின் உறவை புதுபித்து கொள்ள வேண்டிய தருணம் இது என்று பாண்டுக்வாலா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக