வெள்ளி, நவம்பர் 18, 2011

தீவிரவாதத்தின் மீதான போர் எண்ணை வள நாட்டை கைப்பற்றுவதற்கே – பிரிட்டன் போர் எதிர்ப்பு பிரச்சாரக் குழு!!!


லண்டன்:தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவும், பிரிட்டன் அரசும் மேற்கொண்டு வரும் போர்கள் இன சுத்தகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான யுக்தியே ஆகும் என்று பிரிட்டனை சேர்ந்த போர் எதிர்ப்பு பிரச்சாரக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த இரு நாடுகளும் நடத்தும் போரானது முஸ்லிம் நாடுகளின் எண்ணை வளத்தை குறி வைத்து எண்ணைக்கு பதிலாக அவர்களின் குருதியை விலையாக கேட்கும் இன சுத்திகரிப்பு செயலே ஆகும் என்றும். தீவிரவாதிகள் என்று இந்த அரசுகளைதான் சொல்ல வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
ஈராக்கின் மீது பிரிட்டன் போர் தொடுத்த நினைவு தினத்தை ஒட்டி பிரிட்டிஷ் வரலாற்றிலேயே முதன் முறையாக மிகப்பெரிய போர் எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்திய இந்த குழுவானது ஃபலஸ்தீன், ஆஃப்கன், ஈராக் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் மீது ஆதிக்கப் போரை தெரிந்தே நடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் மனித உரிமைகள் கடுமையான முறையில் மீறப்பட்டு வருவதும் லண்டனுக்கு தெரியும் என்றும், இருந்தும் அங்கு வாழும் மக்கள் கற்பழிப்பு மற்றும் கொலை கொள்ளைகளை எதிர்த்தால் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த போர் எதிர்ப்புக் குழு கூறியுள்ளதாவது; பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த போரானது ரத்தவெறி கொண்ட காலனியாதிக்க போர் என்றும் விமர்சித்துள்ளது. மேலும் மேற்கத்திய ராணுவ வீரர்கள் தங்களின் சுதந்திரத்திற்காக போர் செய்யவில்லை என்றும் மாறாக அவர்கள் பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் எக்ஸ்சோன் மொபைல் ஆகிய நிறுவனங்களின் சுதந்திரத்தைத் தான் காப்பாற்ற போர் செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் ஜனநாயகத்தை பரப்பவில்லை என்றும் பொருளாதார ஆதிக்கத்தை ராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் நிறுவுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டன் கடந்த 10  வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகள் மீது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு போர் தொடுக்க அமெரிக்கா தான் வழி நடத்துகிறது என்றும் வாஷிங்டன் அதிகாரிகள்தான் தீவிரவாதிகள் என்றும் தெரிவத்துள்ளது.
எனவே நாம் வாஷிங்டன் தீவிரவாதிகளான செயற்குழு, சட்ட மேலவை மற்றும் நீதித் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து தீவிரவாதிகளை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அக்குழு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக