வெள்ளி, நவம்பர் 18, 2011

எதிர்ப்பாளர்கள் மீண்டும் ஜுக்கோட்டி பூங்காவிற்கு செல்லலாம் – நியூயார்க் நீதிமன்றம்


imagesCAY5F6H6வாஷிங்டன்:ஜுக்கோட்டி பூங்காவிலிருந்து வலுக்கட்டாயமாக நியூயார்க் போலீசாரால் வெளியேற்றப்பட்ட வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் மீண்டும் பூங்காவில் தங்கியிருப்பதில் பிரச்சனை இல்லை என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தனியாருக்கு உரிமையான பூங்காவில் கூடாரங்கள் கட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கூடாரங்களை அகற்றிய போலீஸின் நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது என நீதிபதி மைக்கேல் ஸ்டால்மான் கூறினார். எதிர்ப்பாளர்களுக்காக வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு மனுவை தாக்கல் செய்தது.
நேற்று காலையில் ஏராளமான எதிர்ப்பாளர்கள் பூங்காவிற்கு மீண்டும் வந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் உள்பட இரு நூறுக்கும் மேற்பட்ட நபர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. ஜுக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்ப்பாளர்கள் போலீஸ் தயாராக்கிய தடுப்புகளை சுற்றிலும் திரண்டிருந்த வேளையில் தீர்ப்பு வெளியானது. போராட்டத்தின் அடுத்த கட்டத்தை குறித்து எதிர்ப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரவு சட்டம் பிறப்பிக்கப்படவில்லை, எனினும் எதிர்ப்பாளர்கள் பூங்காவில் தூங்குவதையோ, பொட்டலங்களுடன் நுழைவதையோ அனுமதிக்க முடியாது என போலீஸ் அறிவித்துள்ளது.
போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைக்கும் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க்கின் திட்டத்தை தான் போலீஸ் அமுல்படுத்துகிறது என எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முபாரக், கத்தாஃபிக்கு அடுத்து ப்ளூம்பர்க்கின் பதவி பறிபோகும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் எதிர்ப்பாளர்கள் பூங்காவிற்கு மீண்டும் வந்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு போராடுவதற்கான உரிமையை வழங்குவதாக எதிர்ப்பாளர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக