திங்கள், நவம்பர் 21, 2011

உ . பி. ,மாநிலத்தை 4 ஆக பிரிக்கும் தீர்மானம் - எதிர்ப்புகள் மத்தியில் நிறைவேற்றினார் மாயாவதி!!!


லக்னோ: உத்திரபிரேதச மாநிலத்தை 4 ஆக பிரித்து கூறு போட மாநில ஆளும் கட்சியான பகுஜன்சமாஜ் கட்சி திட்டமிட்டு இதன்படி இதற்கான தீர்மானம், குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறியது. சபை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலத்தில் வடக்கு, கிழக்கு என 4 திசைகளிலும் உள்ளடக்கிய மாவட்டங்களை இணைத்து பண்டல் கண்ட், புர்வாஞ்சல் , அவாத் பிரதேஷ், பச்சிம் பிரதேஷ் என 4 மாநிலமாக பிரிக்கும் எண்ணம் மாயாவதிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, நன்றாக இருக்கும் , மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மாயாவதி. 

இது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யும் மசோதாவை இன்று கூடும் சபையில் முதல்வர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார், ஆனால் எதிர்கட்சிகள் இவரது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று அவை கூடியதும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தன. மாயாவதி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை 12. 20 வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து கூடிய சபையில் மாநிலத்தை 4 ஆக பிரிக்கும் மாயாவதி தீர்மானத்தை தாக்கல் செய்தார். தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக