திங்கள், நவம்பர் 21, 2011

கஷ்மீர்:15 குழந்தைகளை மதம் மாற்றியதை ஒப்புக்கொண்டார் பாதிரியார்!!!


ஸ்ரீநகர்:கஷ்மீரில் 15 முஸ்லிம் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியதை ஆல் இந்தியா செயிண்ட்ஸ் சர்ச்சின் பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார்.
கஷ்மீரின் முதன்மை முஃப்தியின் தலைமையிலான உயர்மட்ட அறிஞர்கள் சபையின் முன்னால் கடந்த மாதம் பாஸ்டர் சி.எம்.கன்னா இதனை ஒப்புக்கொண்டுள்ளார். கஷ்மீரில் மதமாற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக இவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து உயர்மட்ட சபை பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டது.
முதலில் இதனை ஒப்புக்கொள்ள மறுத்த பாதிரியார் பின்னர் ஆதாரங்களை ஆஜர்படுத்தியதை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை முதன்மை முஃப்தி முஹம்மது பஷீருத்தீன் தெரிவித்துள்ளார். மதமாற்றம் செய்த 15 குழந்தைகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அளிக்க பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளதாக முஃப்தி கூறினார்.
மதமாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தன்னுடன் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பிரமுகர்கள் இருப்பதாக பாதிரியார் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக தீர்மானம் மேற்கொள்ளும் என முதன்மை முஃப்தி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக