கால்பந்தாட்ட போட்டிகளின் போது முஸ்லிம் வீராங்கனைகள் அணிந்து விளையாடுவதற்கு சிறப்பு ஹிஜாப் அங்கிகளை தயார்செய்துள்ள ஃபீஃபா, அதை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளது.ஹிஜாப் என்னும் முக்காடு அணிவதை
தலையை மறைக்கும் முக்காடுகளை அணிந்துகொண்டு பெண்கள் விளையாடும்போது, எதிரணியினர் அவர்களை இழுத்து தள்ளிவிடும் வாய்ப்புகள் இருப்பதால் இலகுவில் காயமடையும் ஆபத்து இருப்பதாகக் கூறி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிஃபா(உலகளாவிய கால்பந்தாட்ட நிர்வாக நிறுவனம்) இந்தத் தடையைக் கொண்டுவந்தது.
இப்போது, விளையாட்டுக்களின் போது பாதுகாப்பாக அணியக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வகை தலை அங்கிகளை அனுமதிக்கலாமா என்று ஃபிஃபா ஆராய்ந்து வருகின்றது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு முன்னதாக, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹிஜாப் அங்கிகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஃபீஃபா தீர்மானித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக