ஞாயிறு, மார்ச் 18, 2012

கடாபியின் உளவுத் துறைதலைவர் ஆப்ரிக்காவில் கைது


லண்டன்: லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் ஆட்சியில், உளவுத் துறைத் தலைவராக இருந்தவர் ஆப்ரிக்காவின் மவுரிடானியா நாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.லிபியாவில், கடாபி தலைவராக இருந்த போது, அவரது மருமகனான அப்துல்லா அல் சனுஸ்ஸி, உளவுத் துறைத் தலைவராக இருந்தார். கடாபிக்கு எதிரான மக்கள் புரட்சியின் போது அவர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.
அதோடு, 1980 மற்றும் 90களில், அரசுக்கு எதிராக திரண்ட மக்களைக் கொலை செய்தது, தலைநகர் டிரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில், 1,200 கைதிகளைத் திட்டமிட்ட முறையில் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், மொராக்கோ நாட்டின் கசாபிளாங்கா நகரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம், மவுரிடானியா நாட்டின் நூவாக்சோட் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக