ஞாயிறு, மார்ச் 18, 2012

அணுசக்தியில் தயாரிக்கப்படும் மின்சாரம் குறைவு- ஆபத்து அதிகம்: முன்னாள் கடற்படை அட்மிரல் ராமதாஸ்..


  சென்னை: அணுசக்தியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைவானது ஆனால் மிகவும் ஆபத்தானது என்று கடற்படை முன்னாள் அட்மிரல் எல்.ராமதாஸ், தேசிய பெண்கள் உரிமை களப்பணியாளர் லலிதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் கூறியதாவது:
 அணுஉலையால் மிக குறைந்த அளவே மின்சாரத்தை சேமிக்க முடியும். இந்த குறைந்த மின்சாரத்தை பெறுவதற்காக நாம் அதிக ஆபத்தை சந்திக்க வேண்டும். மேலும் இங்கு தயாராகும் மின்சாரம் தமிழகத்தின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யாது. சென்னை நகரின் மின்சார தேவையில் 13 விழுக்காட்டை மட்டுமே தீர்க்க முடியும்.
 கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் மீது பொறுப்பற்ற, தரம் குறைந்த குற்றச்சாட்டுகளை கூறி வருவது வேதனை அளிக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த விஷயத்தில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றனர் அவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக