ஞாயிறு, மார்ச் 18, 2012

சங்கரன் கோவில் - தொடங்கியது வாக்குப்பதிவு - மக்கள் ஆர்வத்துடன் க்யூவில்!


              சங்கரன்கோவில்: மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, அமைச்சரான சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பாரதீய ஜனதா சார்பில் முருகன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 13 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே மட்டுமே 4 முனை போட்டி நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக