ஞாயிறு, மார்ச் 18, 2012

அமெரிக்க அடிமைகளை எதிர்த்துபுரட்சி செய்யுங்கள்: அல் - குவைதா..


 வாஷிங்டன்:அரபு புரட்சியைப் போல, பாகிஸ்தானிலும் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அல் - குவைதா தலைவர் அய்மன் அல் ஜவாகிரி, பாகிஸ்தான் ராணுவத்தை, அமெரிக்காவின் அடிமைகள் என முத்திரை குத்தியுள்ளார்.அல் - குவைதா தலைவர் ஜவாகிரி தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்களை புரட்சியில் ஈடுபடும் படி அவர் அழைப்பு விடுக்கும் 10 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ நேற்று வெளியானது.
 அதில் அவர் கூறியிருப்பதாவது:பாகிஸ்தான் ராணுவம் தனது நம்பிக்கை துரோகத்தை கைவிட வேண்டும் என்றால், அதற்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் திரள வேண்டும். பாகிஸ்தான் மக்களுக்கு அரபு புரட்சி வழிகாட்டியுள்ளது. அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக நீங்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும்.பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவின் அடிமைகளாகச் செயல்படுகிறது. நீங்கள் புரட்சியில் ஈடுபடாத வரை அது அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்படாது.இவ்வாறு ஜவாகிரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக