இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினெண்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 13 இலட்சம் படை வீரர்களை கொண்ட பலம்வாய்ந்த இந்தியாவின் தரை படைக்கு இதுவரை வீ.கே. சிங் தலைமை தாங்கி வந்தார். எதிர்வரும் மே 31ம் திகதியுடன், இவரதுபதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் தான் பிறந்தது 1951 இல் தான் எனவும் மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க தனது தகுதி உள்ளதாகவும், மத்திய அரசை எதிர்த்து
வழக்கு தொடர்ந்தார் வீ.கே.சிங். ஆனால் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வீ.கே.சிங்கிற்கு எதிராகவே தீர்ப்பளித்தது. இதையடுத்து, வீ.கே.சிங் விலக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதுடன், அடுத்த இராணுவ தலைமை அதிகாரி யார் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளது. கிழக்கு பிராந்திய இராணுவ தலைமை தளபதியாக இதுவரை கடமையாற்றி வந்த விக்ரம் சிங், தற்போது இராணுவ தளபதியாக பதவியேற்க உள்ளதும் 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை இராணுவ தளபதியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக