ஞாயிறு, மார்ச் 04, 2012

ஹும்ஸில் ராணுவ வேட்டை தொடர்கிறது :47 புரட்சி ராணுவத்தினர் பலி !

Fresh assault by Syrian forces on Homsடமாஸ்கஸ்:புரட்சி ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் சிரியாவின் நகரமான ஹும்ஸில் ராணுவத்தின் அராஜகம் தொடர்கிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்ஸாரின் வெறிப்பிடித்த ராணுவம் குண்டுவீச்சில் ஈடுபட்டது. தாக்குதலில் குறைந்த 47 புரட்சி ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அத்தியாவசியப் பொருட்களும், மருந்தும், போர்வைகளும் விநியோகம் செய்ய நகரத்தில் நுழைவதற்கு அரசின் அனுமதி கோரி ரெட்க்ராஸ் காத்திருக்கும் வேளையில் மேலும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
காலிதிய்யா, பாப் ஸஹாப், காதிர் மாவட்டங்களில் கடுமையான குண்டுவீச்சு நிகழ்ந்துள்ளது. அதேவேளையில், ரெட்க்ராஸ் குழுவினருக்கு பாப் அம்ரில் நுழைய முடியவில்லை என்று குழுவின் செய்தி தொடர்பாளர் ஸாலிஹ் தப்பாக்கே அறிவித்துள்ளார். அதிகாரிகளிடமிருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு தலைபட்சமான, பாரபட்சமானது என்று அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா பொது அவையில் பொதுச்செயலாளர் பான் கீ மூன் சிரியாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கையில் சிரியாவி உறுப்பினர் பஷர் ஜஃபரி கூறியது: எதிராளிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் காதால் கேட்டவை ஆகியவற்றின் அடிப்படையில் சிரியா மீது அவதூறு சுமத்தப்படுகிறது. இதில் கூறுவதை போல சிரியாவில் நெருக்கடி ஒன்றும் ஏற்படவில்லை என்று ஜஃபரி கூறினார்.
சிரியா அரசு தனது சொந்த குடிமக்களை கொன்று குவிக்கிறது என்று குற்றம் சாட்டிய மூன், சாதாரண மக்களை கொலைச் செய்வதும், அநியாயமான கைதுகளும், சித்திரவதைகளும் பஸ்ஸாரின் அரசு தொடர்வதாக கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக