சனி, மார்ச் 17, 2012

போலீஸ் காவலில் சித்திரவதை: கஸ்மி நீதிமன்றத்தில் புகார் !

kazmiபுதுடெல்லி:இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி, தன்னை போலீஸார் காவலில் வைத்து சித்திரவதைச் செய்ததாக டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். முதன்மை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் இப்புகாரின் மீது இன்று விசாரணை நடத்துவார்.

கைது செய்யப்பட்டது முதல் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக விசாரணை அதிகாரிகள் மனோரீதியாக தன்னை சித்திரவதைச் செய்ததாக கஸ்மி தனது வழக்கறிஞர் மூலமாக அளித்த புகாரில் கூறுகிறார்.
டெல்லி போலீசும், இதர புலனாய்வு ஏஜன்சி அதிகாரிகளும் காவலில் கஸ்மியிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் போலீஸ் சந்தேகிக்கும் 3 ஈரான் நாட்டு குடிமகன்கள் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஹவ்ஷாத் அஃப்ஷர் ஈரானி, ஸய்யித் அலி மஹ்தி, முஹம்மது ரஸா அபோல் காஸமி ஆகியோர் கஸ்மியுடன் ஒத்துழைத்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்று டெல்லி போலீஸ் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக