இஸ்லாமாபாத்:ஜூலை மாதம் பாகிஸ்தான் தாலிபான் கடத்திச் சென்ற சுவிஸ் தம்பதியினரை விடுவித்துள்ளது. ஆப்கான் எல்லையையொட்டிய வடக்கு வஸீரிஸ்தானில் ராணுவ செக்பாயிண்டிற்கு அருகே சுவிஸ் தம்பதியினர் கொண்டு விடப்பட்டனர். நேற்று காலை போராளிகள் சுவிஸ் தம்பதியினரை ஒப்படைத்து விட்டதாகவும், ஹெலிகாப்டரில் பெஷாவரில்
பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை கொண்டு செல்லப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸிடம் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தம்பதியினர் போராளிகளிடமிருந்து தப்பித்ததாக ஏ.எஃப்.பி கூறுகிறது. சுவிஸ் தூதரகமோ, பாக்.தாலிபானோ இதனை உறுதிச்செய்யவில்லை.
சுவிஸ் நாட்டைச் சார்ந்த ஓலிவர் டேவிட் ஓக், அவரது மனைவி டேனிலா விட்மர் ஆகியோரை பிணைக் கைதிகளாக பிடித்த வீடியோ காட்சியை பாக்.தாலிபான் முன்னர் வெளியிட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக