செவ்வாய், ஜனவரி 03, 2012

பாஜாஜின் புதிய மலிவு விலை கார் RE60 !


பாஜாஜ் ஆட்டோ நிறுவனம் RE60 என்ற புதிய சிறிய ரக, விலை குறைவு காரை அறிமுகம் செய்துள்ளது. இது விற்பனைக்கு இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்கர வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இது அதிக அளவில் பயன்படும் என்று தெரிகிறது. 

200சிசி பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்தக் கார் பஜாஜ் ஆட்டோவின் 3 சக்கர வாகனங்கள் விற்கப்படும் அயல்நாட்டு சந்தைகளையும் குறிவைத்துள்ளது.

இந்த புதிய சிறிய ரக கார் அதிகப்ட்சமாக 70கிமீ வேகம் வரை செல்லும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ வரை செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 சக்கரவாகன துறையை இது இலக்காகக் கொண்டிருப்பதால் பெரிய அளவுக்கு இந்த கார் நகர்ப்புறங்களில் வெற்றியடையும் என்று பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்டொன்றிற்கு 5,20,000 3 சக்கர வாகனங்களை பஜாஜ் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் 2 லட்சம் வாகனங்களே விற்பனையாகிறது. மீதம் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக இலங்கைக்கு அதிக அளவில் ஏற்றுமதியாவதால் இந்த புதிய ஆர்.இ.60 மலிவு விலை காரும் இலங்கையில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியச் சந்தைதான் எங்கள் பிரதான குறி என்று கூறுகிறார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக