செவ்வாய், ஜனவரி 03, 2012

ஆயில் சப்ளை பைப்லைன் வால்வை யாராவது திறக்க முடிந்தால் பேரழிவு நிச்சயம்


சமீப நாட்களில் உலகின் எண்ணை சப்ளை நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் திருட்டுத்தனமாக சிலர் புகுந்து கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இது, உலக அளவில் பெரிய அழிவையே ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம், தற்போதெல்லாம் நாடுகளுக்கும், நகரங்களுக்கும் இடையிலான எண்ணை சப்ளை பைப்புகள்கூட கம்ப்யூட்டர்களாலேயே திறந்து மூடப்படுகின்றன. தோஹாவில் நடைபெற்ற உலக பெற்றோலியம் காங்கிரஸின் மாநாட்டில் இந்தக் கவலையை பல எண்ணை நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன.எண்ணை சப்ளை எதிர்பார்க்கப்படாத ஒரு பைப்பின் முடியை கம்ப்யூட்டரில் யாராவது ஒரு ஹக்கர் திறந்துவிட்டால், லட்சக் கணக்கான பேரல் எண்ணை வெளியே பாயத் தொடங்கிவடும் அபாயம் ஏற்படலாம். அது பெரிய தீவிபததையும் ஏற்படுத்தி விடலாம்.
பன்னாட்டு எண்ணை ஜயன்டான ஹெல் நிறுவனத்தின் ஐ.டி. மேனேஜர் லுடொல்ஃப் லுஹ்மன், “எமது கமப்யூட்டரில் யாராவது ஒருவர் புகுந்து, ஆயில்
பைப் லைனின் வேல்வை திறக்கவோ, முழுமையாக ரிலீஸ் பண்ணவோ முடிந்தால், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவு நீங்கள் எந்த ஹாலிவூட் திரைப்படத்திலும் பார்த்திராத அளவுக்கு மிகவும் பயங்கரமாக இருக்கும்” என்றார்.
“சில கம்ப்யூட்டர் என்ட்ரிகள் ஏற்படுத்தக்கூடிய விளைவு, எவ்வளவு மோசமாக இருக்கும்? எண்ணை, பணம், ஆகியவற்றின் இழப்பு என்பதையெல்லாம்விட, லட்சக் கணக்கான உயிர்கள், நகரங்களையே எரித்து விடக்கூடிய தீ, என்வயாமென்ட் பாதிப்புகள் என்ற எல்லாமே ராட்சத அளவில் இருக்கும்.
எமது கம்ப்யூட்டர்களில் ஹக்கர்கள் நுழைவதற்கு எடுக்கும் முயற்சிகளை சமீப நாட்களில் நாம் அதிகம் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இதுவரை அவர்களது முயற்சிகள் ஏதும் பலிக்கவில்லை. அந்த வகையில் இதுவரை நாம் அதிஷ்டசாலிகள். ஆனால், எமது அதிஷ்டம் எப்போதும் தொடரும் என்று சொல்ல முடியாது” என்றும் அவர் விளக்கினார்.
ஆயில் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவுவது வெவ்வேறு காரணங்களுக்காக என்று கூறப்படுகின்றது. அதிக ஊடுருவல்கள் நிகழ்வது, வர்த்தகப் போட்டி காரணமாகவே.
சில பன்னாட்டு பெரிய நிறுவனங்களே, மற்றைய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து உளவு பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று தெரிய வருகின்றது. ஆயில் வர்த்தகம் தொடர்பான டென்டர்கள், அதற்கு சில நிறுவனங்கள் வழங்கும் கோட்டேஷன்களை தெரிந்து கொள்வதே வர்த்தக ஊடுருவல்களின் நோக்கம்.
மற்றொரு வகை ஆபத்தானது. அது, சில நாடுகளின் உளவுத்துறைகள் தமது எதிரி நாடுகளின் ஆயில் சப்ளை பைப் லைன்களின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபடுவது. இவர்களது நோக்கமே எதிரி நாட்டில் அழிவை ஏற்படுத்துவதுதான். மூன்றாவது வகை, த்ரில்லுக்காக கிரிமினல் வேலைகளைச் செய்யும் ‘திறமைசாலிகள்’ கம்ப்யூட்டர்களில் ஊடுருவ நினைப்பது.
அபுதாபியில் இயங்கும் ஒன்ஷோர் ஆயில் நிறுவனத்தின் ஐ.டி. செக்யூரிட்டி துறைத் தலைவர் ரீமர் ப்ரோவர், “மற்றைய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் என்றால், சில மணி நேரம் நிறுத்தி வைத்து விடலாம். ஆனால், எமக்கு அந்த வசதிகூட கிடையாது. 24 மணிநேரமும் ஆயில் சப்ளை செய்ய வேண்டிய ட்ரேடில் நாம் இருக்கிறோம்” என்றார்.
“இப்போதெல்லாம் கம்ப்யூட்டர்களை ஹக் பண்ணுவதற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்தான் வரவேண்டும் என்றில்லை. யாரும் முயற்சி செய்யக்கூடிய அளவில் ஆன்லைனிலேயே ஸ்டெப்-பை-ஸ்டெப் விளக்கங்கள் இருக்கின்றன” என்றும் கூறுகிறார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக