காபூல்:தாலிபானுடன் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், வடக்கு காபூலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பக்ராம் விமான தளம் மீது தாலிபான் போராளிகள் தாக்குதலை நடத்தினர். நேற்று முன்தினம் ஒன்பது ஏவுகணைகள் விமானதளம் மீது ஏவப்பட்டன. இத்தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள் என தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஸஹீபுல்லாஹ் முஜாஹித் அறிவித்துள்ளார்.
ஆனால், நேட்டோ ராணுவத்தினரோ, அமெரிக்காவோ இதனை உறுதிச் செய்யவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் விமான தளத்தில் புதுவருட கொண்டாட்டம் நடக்கும் வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதல் எங்களிடன் புத்தாண்டு பரிசு என ஸஹீபுல்லாஹ்
முஜாஹித் அறிவித்துள்ளார்.
முஜாஹித் அறிவித்துள்ளார்.
இத்தாக்குதலை உறுதிச்செய்த ஆப்கான் அரசு அதிகாரிகள், தாக்குதலில் யாரேனும் கொல்லப்பட்டார்கள் என்பதுக் குறித்து தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கத்தர் நாட்டில் அவர்களுக்கு ஒரு அலுவலகத்தை திறக்க கர்ஸாயிக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையே பாக்.ராணுவத்தினர் மீதான தாக்குதலை நிறுத்த தாலிபான் முடிவுச்செய்துள்ளது. தாலிபான் தலைவர் முல்லா உமரின் உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக