செவ்வாய், ஜனவரி 03, 2012

ஈராக்கில் நடைபெற்ற தாக்குதல்களில் பொது மக்கள் 1,62,000 பேர் பலியாகியுள்ளனர்: இங்கிலாந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் கணக்கெடுப்பு !


ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது
இதனால் பாதுகாப்பிற்கென அமெரிக்கப்படைகள் முகாமிட்டுள்ளன. தற்போது அமெரிக்கப் படைகள் விலக்கி கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், அங்கு குண்டுவெடிப்புகள் சகஜமாகி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.பி.சி எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம்(என்.ஜி.ஓ) நடத்திய ஆய்வில் ஈராக்கில் நடந்த பல்வேறு குண்‌டுவெடிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 1 லட்சத்து 62 பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்புப்படையினர் எனவும் கடந்த 2008-2009ம் ஆண்டுகளில் தான் அதிக எண்ணிக்கையிலான உயிர்பலி ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக