வடகொரியாவின் அரசியல் குறித்து மேற்குலக ஊடகங்கள் பல்வேறு யூகச் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் புதிய தலைவர் கிம் ஜாங் உன் தன் தந்தை வழியில் கடமைகளைச் செய்யப் புறப்பட்டு விட்டார். இராணுவ தளம் ஒன்றில் வீரர்களின் முகாமில் அவர் பல்வேறு இடங்களில் சோதனையிடுவது போன்ற புகைப்படங்களை வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. குழாயில் வரும் வெந்நீரின் தரம், வீரர்களின் படுக்கையின் தரம் மற்றும் வீரர்களுக்கான உணவுகளின் தரம் ஆகியவற்றை அவர் பரிசோதித்தார். எனினும் இந்த சோதனை எந்த இடத்தில் எப்போது நடந்தது எனத் தெரிவிக்கப்படவில்லை. புதிய தலைவரின் முதல் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தென் கொரிய ஜனாதிபதி லீ மியுங் பாகிஸ்தான் நேற்று முன்தினம் விடுத்த புத்தாண்டு செய்தியில், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவரம் புதிய திருப்பத்தில் உள்ளது. மாற்றங்களுக்கான வாய்ப்பும் உள்ளது. ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு தென் கொரியா இப்போதும் தயாராக உள்ளது. ஆனால் எரிச்சல் ஊட்டும் நடவடிக்கைகளில் வடகொரியா நடந்து கொண்டால் அதற்குப் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார். வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்ட புத்தாண்டு செய்தியில் புதிய தலைவரை தங்கள் உயிர் உள்ளவரை காக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக