புதன், ஜனவரி 04, 2012

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: IUML பொதுக்கூட்டம் !


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும்" என மத்திய அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்வு முடிவுகளும், முஸ்லிம்களின் பிரதி நிதித்துவமும், பால் விலை - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல், கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய - மாநில அரசுகளைக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர
கிளை சார்பில், 30.12.2011 வெள்ளிக் கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், நகர துணைத்தலைவர் ஹாஜி எஸ்.டி. கமால், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட கவுரவத் தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் அப்துல் ஹக் ஃபைஸல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.

மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநிலச் செயலாளர்களான நெல்லை மஜீத், காயல் மகபூப், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  நிறைவாக நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.  இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக