பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அண்மையில் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
மத்திய அரசின் இம்முடிவுக்கு விசுவ ஹிந்து பரிசத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விசுவ ஹிந்து பரிசத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தினேஷ் சந்தர் '' இஸ்லாமியர்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை விசுவ ஹிந்து பரிசத் எதிர்க்கிறது. இது போன்ற ஒதுக்கீடு மத மற்றும் ஜாதி ரீதியிலான
மோதலைத் தூண்டக் கூடும். இது அபாயகரமானது.இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளையும் அரசு ஏற்கக் கூடாது '' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக